2009
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்பு, தேசிய அளவில் மின்னணு வாக்குப் பதிவு
இயந்திரம் (EVM) பற்றிய சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல தரப்புகளில்
இருந்தும் கேள்விகளும், சந்தேகங்களும், புகார்களும் வந்தவண்ணம்
இருக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் இவை எல்லாவற்றுக்கும்
பதிலாக, இந்த இயந்திரங்கள் முற்றிலும் பாதுகாப்பானவை, இவற்றில் எந்த
மோசடியும் செய்ய முடியாது என்ற ஒரே பதிலையே கிளிப்பிள்ளை போலச் சொல்லி
வருகிறது. இந்த இயந்திரங்களின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை பற்றிய
பொது விவாதத்திற்கும், விசாரணைக்கும் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை. ” நாங்க சொல்லிட்டோம்ல, நம்புங்க”
என்பதே அதன் நிலைப்பாடாக இருந்து வருகிறது. தற்போது ஓய்வு பெற்றுள்ள
தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா இன்னும் ஒருபடி மேலே போய் ”இந்திய EVMகள்
முற்றிலும் எந்தக் குறைகளும் இல்லாதவை (perfect). இவற்றை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
ஒருபுறம் EVM பற்றிய எந்தத் தகவல்களையும் வெளியிட மறுத்து, மறுபுறம்
‘புகார் சொல்பவர்கள் முடிந்தால் EVM பாதுகாப்பானதல்ல என்று நிரூபித்துக்
காட்டுங்கள்’ என்று சவாலும் விட்டது தேர்தல் ஆணையம். இப்போது EVM
இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்று அப்பட்டமாக, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்
பட்டு விட்டது. ஆயினும் தேர்தல் ஆணையத்தின் மனப்போக்கில் எந்த மாற்றமும்
இல்லை. இயந்திரத்தின் வடிவமைப்பையும், செயல்முறைகளையும் மறுபரிசீலனை
செய்வோம் என்ற அறிவிப்பு கூட வரவில்லை. (ஆனால் உள்ளுக்குள் பதற்றமடைந்து
சில துரித நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகக் கேள்வி. எல்லா EVM
இயந்திரங்களும் பத்திரமாக உள்ளனவா என்று கறாரான கணக்கெடுப்பும் நடந்து
கொண்டிருக்கிறதாம்).
மாறாக, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து இதனை
அம்பலப் படுத்திய ஹரி பிரசாத் மீது பழிவாங்கும் நடவடிக்கையைத் தான் அரசு
செய்திருக்கிறது. எல்லா வாசல்களும் மூடப் பட்ட நிலையில், ஒரு ஜனநாயக
அமைப்பில் உண்மையை உரக்க அறிவிப்போர்களுக்கு (whistle blowers) வேறு என்ன தான் வழிவகை உள்ளது?
அம்பு நேராகத் தோன்றினாலும் கொடுஞ்செயல் செய்கிறது. கோணலாக இருந்தாலும்
வீணை இன்னிசை தருகிறது. மக்களின் பண்புகளை அவர்களது செயலாலும், அதன்
ஒட்டுமொத்த விளைவாலும் தான் மதிப்பிட வேண்டும்.
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலாற் கொளல்
என்பது வள்ளுவர் உரைத்த நீதி. எனவே, சட்டப்புத்தக ரீதியாகத் தவறு
என்றாலும், ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் அமைப்பின் மீதும் உள்ள நம்பகத்
தன்மையே கேள்விக்கு உள்ளாகும் போது, அதைப் பாதுகாப்பதற்காக இந்தத்
தொழில்நுட்பக் குழுவினர் செய்திருக்கும் சிறு சட்டமீறல் பெரிய தவறல்ல என்றே
நான் கருதுகிறேன்.
EVM
இயந்திரங்கள் அறிமுகப் படுத்தபோது, காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சிகளும்
இவை பற்றிய சந்தேகங்களைத் தெரிவித்த படியே வந்தன. 2009 தேர்தலில் எல்லா
கருத்துக் கணிப்புக்களையும், ஆதாரபூர்வமான தேர்தல் அலசல் கருத்துக்களையும்
பொய்யாக்கும் வண்ணம், அதிர்ச்சியடையத்தக்க வகையில் காங்கிரஸ் கூட்டணி
எதிர்பார்ப்பை விட மிக அதிகமாக வெற்றி பெற்றது. சிவகங்கை தொகுதியில்
ப.சிதம்பரம் வெற்றி உட்பட வேறு பல தொகுதிகளில் சந்தேகப் படும் வகையில்
கடைசி நேர தேர்தல் முடிவுகள் மாற்றமடைந்து வந்தன. அதன்பிறகும் பா.ஜ.க,
அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் முறைகேடுகள் பற்றியும், EVM பற்றியுமான
கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால் இந்தத் தேர்தலுக்குப் பின்
காங்கிரசும், திமுக போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் இது பற்றி ஒன்றும்
கூறாமல் அமைதி காக்க ஆரம்பித்து விட்டன.
அரசியல் ஆய்வாளர்கள் இனிமேல் எழுந்துவர வாய்ப்பில்லை என்று ஒருமித்த
குரலில் எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல்
வெற்றிகள் பெற ஆரம்பித்தது எப்போதிலிருந்து என்று பார்த்தால்,
ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்.
இந்த விஷயங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அரசியல் சார்புகளுக்கு அப்பால், ஒரு சக கணினி
தொழில்நுட்ப வல்லுனனாக, ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட சக
இந்தியக் குடிமகனாக ஹரி பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்கு எனது
மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்முறை தேர்தல்
கணிப்பு நிபுணர் & அரசியல் விமர்சகர் G.V.L நரசிம்ம ராவும் மின்னணு
வாக்கு இயந்திரங்களை அம்பலப் படுத்தும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
EVM இயந்திரம் பாதுகாப்பானதல்ல என்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்
பட்டிருக்கும் நிலையில், இதே இயந்திரங்களை எந்த மாற்றமும் இல்லாமல்
அடுத்தடுத்த தேர்தல்களில் பயன்படுத்துவது நியாயமல்ல; சரியானதல்ல.
இந்திய ஜனநாயகத்தின் அச்சாணியான நமது தேர்தல் முறை முற்றிலும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும், நம்பகத் தன்மை உடையதாகவும் இருக்க
வேண்டும். அமெரிக்கா, நெதர்லாந்து, அயர்லாந்து உட்பட பல
நாடுகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்று தொழில்நுட்ப
ரீதியாக நிரூபிக்கப் பட்டவுடன், அந்த நாட்டு அரசுகள் இந்த இயந்திரங்களின்
பயன்பாட்டை நிறுத்தி விட்டன; பழைய வாக்குச் சீட்டு முறைக்கே திரும்பச்
சென்று விட்டன.
எனவே அடுத்து வரும் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்
இயந்திரங்களில் சுட்டிக் காட்டப் பட்ட குறைகள் களையப் படவேண்டும்; அல்லது
மாற்று வழிகள் கொண்டுவரப் படவேண்டும். ஒவ்வொரு கட்சியும் அதைத் தொடர்ந்து
வலியுறுத்தி வரவேண்டும்.
indiaevm.org, indianevm.com ஆகிய வலைத்தளங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.
ஹரி பிரசாத் மற்றும் குழுவினரின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க விரும்புவோர் தங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்.
இது தொடர்பான Democracy at Risk! என்ற புத்தகம் பற்றிய விவரங்கள் இங்கே. இந்தப் புத்தகத்தை pdf வடிவில் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
BSP works for Sarvajan Hithay Sarvajan Sukhaya. So all must wrk hard and elect BSP for the welfare, happiness and Peace of all socieites.
http://indiatoday.intoday.in/…/gods-sent-noti…/1/883808.html
The notices were addressed to the gods asking them to file property tax
returns. The gods were asked to pay amounts ranging from Rs 4,000 to Rs
3 lakh, depending on how big their temples are.
In the Fatehabad
district of Haryana, gods have been asked by municipal council to file
their property tax returns. In the temples of the district, gods like
Goddess Durga, Lord Shiva, Radha-Krishna duo and many others were sent notices asking them to file their property tax returns.
The deities were asked to pay the tax depending on the land occupied by
their temple. The tax amount ranged from Rs 4,000 to Rs 5 lakh.
Surprisingly, the notice papers were directly addressed to the gods. The
municipal council soon became a laughing stock leaving people to wonder
if gods also paid taxes.
Goddess Durga was also sent a notice to
pay a property tax of Rs 1.10 lakh. It did not stop there as a
cremation ground was also sent a property tax bill.
It is for the
first time that the gods have been asked to pay the tax, and talk about
providing as much tax relaxation as they can to the gods.
Next they will be convicted in the disproportionate assets case and sent to jails.