Kushinara Nibbana Bhumi Pagoda- Free Online Analytical Research and Practice University for “Discovery of Buddha the Awakened One with Awareness Universe” in 116 Classical Languages
White Home, Puniya Bhumi Bengaluru, Prabuddha Bharat International.
Thank you for searching my AanmeegaPuthayal Website this website to
making for all type news in spiritual what about news you need get it
all in one place thank you…
மௌனகுருவான கௌதம புத்தர் வரலாறு (Budhar History In Tamil) Gautama Buddha
புத்தர்
கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய
மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த
மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும்
தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’,
‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’,
‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய
மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின்
மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய
பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு
உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் போதனைகளனைத்தும் ‘உள்ளார்ந்த சுயநிலையை
உணர்ந்து இறுதியில் பேரின்பத்தை அடைவதையே’ உணர்த்துகிறது. எதிர்கால
கர்மாவினை அதிகரிக்காமல் தடுத்து, நல்ல கர்மங்களை அதிகரித்து, மனதைத்
தூய்மைப்படுத்தி, ஞானத்தை அடையும் பௌத்த போதனைகளை வகுத்த கௌதம புத்தரின்
வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி விரிவாக
அறிய தொடர்ந்து படிக்கவும்.
சித்தார்த்த கௌதமா அவர்கள், கபிலவஸ்து பேரரசரான சுத்தோதனா கௌதமா என்ற
அரசருக்கும், மகாமாயா என்ற அரசிக்கும் மகனாக நேபாளில் உள்ள லும்பினி என்ற
இடத்தில் பிறந்தார். புத்தர் பிறந்த போது, அவரது வளமான எதிர்காலத்தை
சுட்டிக்காட்டும் விதமாக அவரது உடலில் முப்பத்திரண்டு புனிதமான பிறவி
அடையாளங்கள் இருந்தன. அவர் பிறந்து, ஏழு நாட்கள் கழித்து அவரது தாயார்
இறந்ததால், அவர் மகாப்ரஜாபதி என்ற அவரது சகோதரியால் வளர்க்கப்பட்டார்‘எங்கு
தனது மகன் உலக இன்பங்களைத் துறந்து, துறவறம் பூண்டுவிடுவான்’ என்று அஞ்சிய
அரசர் சுத்தோதனர், சித்தார்த்தர் அவர்களுக்குப் பதினாறு வயதிருக்கும்
போது, யசோதரா என்ற பெண்ணை மணமுடித்து வைத்தார். அவர்கள் இருவருக்கும்
ராகுலா என்றொரு மகனும் பிறந்தான். அவர் வாழ்ந்து வந்த ஆடம்பர, அரச வாழ்வின்
மீது பற்றற்றவராக இருந்தார், சித்தார்த்தர் சித்தார்த்தரின் ஜாதக
கணிப்பின் போது, ‘அவர் உலகம் போற்றும் துறவியாக வருவார்’ என்று ஜோதிடர்கள்
கூறியதால், அவரை சீரும், சிறப்போடு வளர்த்து அரசராக்க எண்ணிய அவரது தந்தை,
அவருக்குக் கஷ்டம், பிரச்சனை மற்றும் கடின உழைப்பு போன்றவற்றிக்கு அர்த்தம்
தெரியாத அளவிற்கு, அவரை அரண்மனையிலே வைத்து வளர்த்தார். தனது இளம் வயதில்,
செல்வ செழிப்பான ஆடம்பரமான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார், சித்தார்த்தர்.
தனது இளமைப் பருவம் முழுவதும் அரண்மனையிலே செலவிட்டார்அரண்மனை
வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் வெறுத்துப் போனதால், உலகின் தனது
இருத்தலுக்கானப் பொருளை அறிய வேண்டி, ஒரு நாள் யாருக்கும் தெரியாமல், தனது
தந்தையின் கட்டளைக்கு எதிராக அரண்மனையை விட்டு வெளியே சென்றார்.
ஜோதிடர்கள் கணித்தது போலவே, வழியில் அவர், ஒரு முடமான முதியவர், ஒரு
நோயுற்ற மனிதன், ஒரு பிணம் மற்றும் இறுதியாக ஒரு அமைதியான துறவியைப்
பார்த்தார். முதலில் கண்ட மூன்று பேரும், அவரைக் கலக்குமுறச் செய்தனர்,
மேலும் அவர்கள், ‘அழகு மற்றும் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல’ என்றும் புரிய
வைத்தனர். ஆனால், அவர் இறுதியில் கண்ட துறவியின் முகத்திலோ அமைதி
தெரிந்தது. இதனால், பிறப்பு, முதுமை, நோய், மற்றும் இறப்பு போன்ற
பிரச்சனைகளுக்கான விடையைக் கண்டறிய அவர், தனது மனைவி, குழந்தைகள், அரண்மனை,
ராஜ வாழ்வு போன்ற அனைத்து உலக உடைமைகளை விட்டு, துறவற வாழ்க்கை மேற்கொள்ள
வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். எனவே, அவர் ஒரு இருண்ட இரவில் தனது வீட்டை
விட்டு
வெளியேறினார்.
.
உலக உடமைகளைத் துறந்து, துறவறம் பூண்ட சித்தார்த்தர், தனது தலையை
மொட்டையடித்து, மஞ்சள் நிற உடுப்பில், அரண்மனையை விட்டு வெளியேறி,
மகதாவின் தலைநகரான ராஜ்க்ரஹா என்ற இடம் நோக்கி முன்னேறினார். பின்னர்,
அந்த ராஜ்யத்திற்கு அருகே அமைந்துள்ள மலைகளில், துறவிகள் வாழும் குகைகளை
நோக்கிச் சென்றார். அங்கு அவர், அலாமா கலாமோ என்ற துறவியிடம், தனக்கு
வழிகாட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். சிறிது காலத்திற்குப்
பின்னர், அவர் ஆன்மீகப் பின்தொடர்தலுக்காக மற்றொரு துறவியிடம் செல்ல
முடிவு செய்தார். மேலும், அவர் உள்ளார்ந்த பேரின்பத்தை அடைவதற்காக யோகா
மற்றும் சந்நியாசத்தின் தீவிர வடிவங்களைப் பயிற்சி செய்வதில் உறுதியாக
இருந்தார். இந்தத் தொடர்ச்சியான சித்திரவதையால், அவர் முற்றிலும் உணவு
உட்கொள்வதைத் தவிர்த்ததால், அவர் மிகவும் பலவீனமானார்.
ஒரு நாள், அவர் தியானம் செய்ய முயன்ற போது, சில நடனமாடும் பெண்கள் அவர்
அமர்ந்த இடத்தைக் கடந்து சென்றனர். திடீரென்று அவர்கள் பாடிய பாடல்
சித்தார்த்தருக்கு, ‘உண்மையான மகிழ்ச்சி அடைவதற்கு, உணவு உண்ணாமலிருப்பது
போன்ற சுய சித்திரவதைகள் உதவப் போவது இல்லை’ என்று அவருக்குப்
புரியவைத்தது. இதனால், அவர் தீவிர தியானம் மற்றும் பிற நடைமுறைகளைக்
கைவிட்டு, மீண்டும் சாப்பிடத் தொடங்கினார். அவர் ‘உடலும், மனமும் எவ்வித
வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே
உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்றும் உணர்ந்தார்.தனது கேள்விகளுக்கு
பதில் தேடி பல்வேறு மடங்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சென்ற கௌதமர்,
‘உண்மையைக் கண்டறிய ஒரே வழி, தியானம் என்றுணர்ந்தார். பின்னர், பனாரஸ்
அருகே உள்ள போத்கயா காட்டிற்குச் சென்று, போதி மரத்திற்கு அருகிலுள்ள
‘அஜபலா’ என்னும் ஆலமர நிழலில் தியானத்தில் அமர்ந்தார். முழு ஒளியூட்டத்தை
அடைவதற்காக, தனது உயிரையே இழக்கத் தயாராக இருந்து, ஞானம் ஒன்றையே தனது
குறிக்கோளாகக் கொண்டிருந்த கௌதமருக்கு, உலக மாயைகள் பல்வேறு விதமான
இடையூறுகளும், தொந்தரவுகளும் கொடுத்தன. இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல்,
49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது.
ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு
வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார். சார்நாத்தில்
உள்ள மான் பூங்காவில், அவரது பிரபலமான உபதேசம் நடைபெற்றது. அன்றிலிருந்து
அவர், ‘கௌதம புத்தர்’ என்றும், ‘புத்தர்’ என்றும் அழைக்கப்பட்டார்.
புத்தர் தனது போதனைகளை போதிக்க, உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
எண்ணற்ற சீடர்கள் அவரின் போதனைகளை ஆதரித்து, பின் தொடர்ந்தனர். இவரது
போதனைகளுக்கு, இந்துக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.கௌதம புத்தரின்
போதனைகள் அனைத்தும் மனிதர்களை வாழ்வின் துன்பம் மற்றும் தவிப்பிலிருந்து
விடுவிக்ககும் ஒரே நோக்கத்தைத் தழுவியது. ஆகவே, அவர் புத்தமதத்தை
நிறுவினார். புத்தமதம், ‘ஆசையும், துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா
துன்பங்களுக்கும் முக்கிய காரணம்’ என்ற கருத்தை மனிதனுக்கு உரைக்கிறது.
மேலும் அவர் எண்வகை வழிகளான ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’,
‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’
போன்றவற்றை அனைவருக்கும் போதித்தார். இந்தப் பாதையில் சென்றால், ஒரு
நிர்வாணத்தின் இறுதி நோக்கத்தை அடைய முடியும் என்றும் அவர் போதித்தார்.
அவரது போதனைகள் அனைத்தும் இந்து மதத்தின் சாதி முறைக்கு எதிராகவும்,
ஏழைகள், பணக்காரர்கள் என்ற பிரிவினை இல்லாமல் இருந்ததால், வெகுவாகப்
பல்வேறு தரப்பட்ட மக்களை ஈர்த்தது. மவுரியப் பேரரசரான அசோகர், புத்த
மதத்திற்கு ஆதரவளித்தார். சார்நாத் மற்றும் போத்கயா புத்தமதத்தின் மிக
முக்கியமான மையங்களாகக் கருதப்படுகிறது
இறப்பு
புத்தர் அவர்கள், தனது சீடர் ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு உணவு
உண்ணச் சென்றார். அந்த உணவில் அவரது சீடர் கலந்த விஷத்தால், அவர்
நோய்வாய்ப்பட்டார். பின்னர், தள்ளாடி அவர், குஷிநாகா என்ற இடத்திற்குச்
சென்றார். அவர், தனது இறுதி குளியலை காகுத்தா ஆற்றில் குளித்தார்.
இதையடுத்து சில நேர ஓய்விற்குப் பிறகு, அவர் இயற்கை எய்தினார்.
பிக்குணி (bhikkhunī) (பாலி bhikṣuṇī) பௌத்த சமயத்தை சார்ந்த மடத்தின் பெண் துறவியை பிக்குணி என்பர். ஆண் துறவியை பிக்கு என்பர்.
பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கௌதம புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான உபாலி என்பவர் வகுத்த விநயபிடகம் என்ற பௌத்த துறவிகள் பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். [1] [2]
கௌதம
புத்தர் காலத்தில் ஒரு சில பிக்குனிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில்
புகழ் பெற்ற பிக்குணிகளில் பௌத்த சாத்திரங்களின்படி, கௌதம புத்தரின் மனைவி யசோதரை, அத்தை மற்றும் புத்தரின் வளர்ப்புத் தாயான மகாபிரஜாபதி கௌதமி ஆகியோர் முதன் முதலில் பௌத்த சமயத்தில் சேர்ந்து பிக்குணீகளாக வாழ்ந்தனர்.
தமிழ்நாடு
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவலன்-கண்ணகி இணையரின் மகள் மணிமேகலை தமிழ்நாட்டின் முதல் பௌத்த பிக்குணியாக அறியப்பட்டவள்.
பிக்கு நெறிகள்
மகாயாண பௌத்தப் பிரிவில் மட்டுமே பெண்கள் பிக்குணிகளாக சேர்க்கப்படுகிறார்கள். பிக்குணிகளுக்கென தனி மடாலயங்கள் உள்ளன. பிக்குணிகள் சமைத்து உண்ணாது பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பது வினய பீடகத்தின் விதிகளில் ஒன்றாகும்.
மகாயாண பௌத்தப்
பிரிவை பின்பற்றும் கொரியா, வியட்நாம், சீனா மற்றும் தைவான் போன்ற
நாடுகளில் மட்டுமே சிறிய அளவில் பெண்களை பௌத்த மடாலயத்தில் பிக்குணி என்ற
பெயரில் சீடர்களாக சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். திபெத்திய பௌத்தப் பிரிவில் பெண்களை பிக்குணிகளாக மடங்களில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
பௌத்த சமயத்தில் ஆண் பிக்குகள் போன்று பெண் பிக்குணிகள் நிர்வாணத்தை அடையமுடியும்.
தற்காலத்தில் பெண்களை பிக்குணிகளாக பௌத்த சமயப் பிரிவுகள் ஏற்பது குறைந்து கொண்டே வருகிறது.
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் (”முதியோர் பள்ளி”), மற்றும் மகாயான பௌத்தம் (”பெரும் வாகனம்”). தேரவாதம் இலங்கை,
மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற
நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான்,
வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில்
பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.
பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே
பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும்
காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன்
பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது
பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி
வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.[3][4][5][6]
உலகின்
தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் திரப்பட்டுள்ளன.
பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச்
சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை
நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே
பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில்
இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம்
விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.[7]
சார்பிற்தோற்றக் கொள்கை
கடவுள்
அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில்,
புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில்
சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம்
என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:
“எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன.
ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும்
சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை
இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும்
நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே
நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற்
காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று
சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது.”[8].
பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி
இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம்
இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது.
அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின்
அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது -
Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது -
Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை - Dukkha)
மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப்
பார்வைக்கு ஒவ்வாது.
அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக்
கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர்
மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள்
இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில்
கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது
அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக்
கட்டுபட்டவர்களே.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள்
புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு
கொள்கின்றார்கள்[9][10].
துன்பம்
(”துக்கம்”): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய்,
முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை,
வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே.
ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை.
எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
பௌத்தர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள், பெளத்தர்கள் 230
மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன.
அதிகமாகக் குறிப்பிடப்படுவது ஏறத்தாழ 350 மில்லியன் ஆகும்.[11]
தேரவாதமேமியன்மார், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து
உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும்
முதன்மையாகக் பின்பற்றப் படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற
நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு.
வஜ்ரயானம்திபெத், நேபாளம், பூடான், மங்கோலியா ஆகியவற்றிலும், ரஷ்யாவின் , சைபீரியா
பகுதிகள், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு
வருகின்றது. இரசியக் கூட்டமைப்பில் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள கால்மீக்கியா,
பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக்
கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப்
பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது.
பெளத்தமும் அறிவியலும்
பிற
சமயங்கள் போலன்று பௌத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள
தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை
தெளிவுறுத்துகின்றது. “பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல்
சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது.
அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று
நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து
விலக்கிவிடவேண்டும்.”[12]
ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும்,
மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும்
பௌத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது
என்கிறார்கள். இக்கருத்தைப் பௌத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து
அறிவியல் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது.[13]
பெளத்தமும் தலித் மக்களும்
இந்து
சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பௌத்தம் ஒரு மாற்று
வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால்
பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு
மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை
ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே.
தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம்
என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து
சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித்
சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது.[14]