அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
—————–
சமத்துவமும் சமூக நீதியும் சகோதரத்துவமும் இப்புதிய ஆண்டில் தழைத்திட
தடைக் கற்களாய் பிரிவினையை நிலைநாட்டிய சாதிவேறுபா டுகளும் மனக்கிலேசமும்
மறைந்து மண்ணின் மைந்தர்களாய் அண்ணன் தம்பிகளாய் அவனிபுகழ் பெளத்தர்களாய்
ஒருங்கிணைய 2022 புத்தாண்டை வரவேற்போம் உறுதியேற்போம்
வழக்கறிஞர்
AK அம்பேத்கர் தாசன் நிறுவனர் பொதுச்செயலாளர் சமூகநீதி மக்கள் இயக்கம் செய்த சென்னை 15.
*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!*
ஜெய்பீம், அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
இந்தியாவின் பூர்வகுடி மக்களாகிய நாம் கொண்டாட வேண்டிய மிக முக்கியமான நாள் ஜனவரி 1….
உலகில் எந்த ஒரு போராக இருந்தாலும் அதற்கு இரண்டே காரணம்தான் இருக்கும்,,..
ஒன்று ஒரு நாட்டை இன்னொரு நாடு அடிமைபடுத்த……
அல்லது ஒரு நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க….
ஆனால்
சரியாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனவரி 1 ம் தேதி இந்தியாவில்
நடைப்பெற்ற ஒரு போர் இதுவரை இதை தாண்டி மிக முக்கியமான காரணத்திற்க்காக
நடந்தது….
ஆம் உலக வரலாற்றில் “தன்மானத்தை மீட்க” நடைப்பெற்ற ஒரே போர் ஜனவரி 1,1818 புனே பீமா நதிக்கரையில் நடைப்பெற்ற கோரேகான் போர்தான்…..
மராத்திய
அரசர் பேஷ்வா பாஜிராவ்-II தலித் மகர் சமூகத்தினரை முற்றிலும் வெறுத்து
புறக்கணித்தார், இந்த புறக்கணிப்பு என்பது நூற்றாண்டுகளாக தொடரும்
மனுஸ்மிருதியின் கொடுங்கோன்மையின் அங்கம் தான் என்றாலும் பேஷ்வாக்களின்
ஆட்சியில் அது மகாராஷ்டிரத்தில் உச்சத்தில் இருந்தது.
இந்த
21-ம் நூற்றாண்டிலேயே பல சட்டப்பாதுகாப்புகள் இருந்தும் பட்டியலின
மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் பகிரங்கமாக நடக்கும் போது 19-ம் நூற்றாண்டில்
மனிதநேயமற்ற காட்டுமிராண்டிதனமான மனுஸ்மிருதியின் ஆட்சியில் தலித் மக்கள்
எப்படி நடத்தப்பட்டிருப்பர் என்பதை எண்ணிப்பாருங்கள். பொது பிரிவு மக்கள்
நடமாடாத நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட வேலைகளை
செய்வதற்காகவே அந்த தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவும் தம்
எச்சிலைக்கூட கீழே துப்பி தீட்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக தலித்
மக்களின் கழுத்துக்களை சுற்றி கலயம் கட்டிக்கொள்ளவும், அவர்களை நடக்க
அனுமதித்திருக்கும் பாதையில் அவர்களின் சுவடுகள் கூட
தீட்டுப்படுத்திவிடும் என்பதற்க்காக அவர்களின் இடுப்பை சுற்றி துடைப்பம்
கட்டிக்கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்….
இந்த வரலாற்று வெஞ்சினம்தான் மனுஸ்மிருதியின் ஆட்சியாளர்களான பேஷ்வாக்களை முறியடிக்குமாறு
மகர் மக்களை ஆங்கிலேயரின் படையில் இணையச் செய்தது…
1818,
ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப்.ஸ்டாண்டன் தலைமையில்
கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா
ஆற்றைக் கடந்து 28,000 வீரர்களைக் கொண்ட பேஷ்வா மராத்தியப் பெரும்படையை
பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர். இந்தப் போரானது அதுவரை
வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை…..
மராத்திய
அரசர் வீரசிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மகர் சமூகத்தினர் இன்றியமையாத
அங்கமாக இருந்து வந்தனர். அவுரங்கசிப்பால் கொல்லப்பட்ட மராத்தா அரசர்
சாம்பாஜியின் உடலை மகர் சமூகத்தினர் மீட்டு வந்ததை மக்கள் மறந்து விட்டனர்.
பேஷ்வா படைகளுடன் சேர்ந்து பானிபட் மற்றும் கர்டா உள்ளிட்ட இடங்களில்
அவுரங்கசிப்பிற்கு எதிரான போர்களில் மகர் சமூகத்தினர் பங்கேற்றனர். ஆனால்
வரலாறு பெரும்பாலும் மனுவாதிகளின் கண்ணோட்டத்தில் மனுவாதிகளால்
எழுதப்படுவதால் உண்மைகள் மறைக்கப்பட்டு திரிபுகள் புனையப்பட்டு வரலாறாகி
விட்டன…
ஏனெனில்
வரலாறு என்றுமே மனுவாதிகளின் கண்ணோட்டத்தில் மனுவாதிகளால் எழுதப்பட்டதால்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பக்கங்கள் பூஜ்ஜியம்தான். வீர
சிவாஜியின் காலத்திற்கு பிறகு ஆட்சியைப் கைப்பற்றிய பேஷ்வாக்கள் எனப்படும்
சித்பவன பார்ப்பனர்கள் தமது ஆட்சியில் வருணாசிரம கொடுங்கோன்மையை
உறுதிப்படுத்தினர். இது மகர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியது..
அதே
நேரத்தில் ஆங்கிலேயர்கள் பொருளாதார – அரசியல் ரீதியாக இந்தியாவை
ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்திய மக்களைக் கொடுமைப்படுத்தினர். தமது அரசு –
இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள்
தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் இராணுவத்தில் தலித்
மக்களை சேர்த்துக் கொண்டனர். தலித் மக்களும் தமக்கான அங்கீகாரத்தை
நிலைநிறுத்தவும், கௌரவமான வாழ்வாதாரத்தை இந்த இராணுவப்பணி கொடுத்ததாலும்
பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் இணைந்தனர்…..
ஆனால் மனுவாதிகள் மகர் சமூகத்தினரை மனிதர்களாகவே நடத்தவில்லை.
மனுவாதிகளின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆட்பட்ட தலித் மகர் சமூக மக்கள் 500
நபர்கள்… 28000 பேஷ்வாக்களை கோரேகான் போரில் வெற்றி கொண்டனர். இன்றும்
மனுவாத சிந்தனைக்கொண்ட சாதியவாதிகளின் இதயத்தை குத்தும் முள்ளாக,
வரலாற்றின் அழியாத போராக… பீமா-கோரேகான் போர் அமைந்துவிட்டது…..
இந்த வெற்றிதான் நம்மால் முடியாதது ஒன்றுமல்ல என நிருபித்தது.
ஆடைகளற்றவர்களாக ஆயுதங்களற்றவர்களாக ஆக்கப்பட்ட நம்மை கோட் சூட் போடும் நிலைக்கு மாற்றியது.
கைரேகை இடுபவர்களாக மனுஸ்மிருதி நம்மை ஆக்கியிருந்ததை உடைத்தெறிந்து கம்ப்யூட்டரை தாண்டி சிந்திக்கும் மக்களாய் மாற்றியது….
ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த
கோரேகன் வீரநினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவது வழக்கம்….
அந்த வெற்றியின் நினைவு தினமான ஜனவரி - 01 அன்று நாட்டின்
அனைத்துப்பகுதிகளிலிருந்தும் தலித் மற்றும் அம்பேத்கரிய சிந்தனையாளர்களும்,
ஜனநாயக சக்திகளும் பெருமளவில் உற்சாகமாக கோரேகான் நினைவுச்சின்னம்
இருக்கும் இடம் நோக்கி வந்து மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவர்…
பெருமளவில்
மக்கள் உற்சாகமாக அங்கு வருவதும் வானதிர “ஜெய் பீம்” முழக்கக்களை எழுப்பி
தங்கள் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வலிமையையும் வெளிப்படுத்துவதும்
புத்தாண்டின் சிறப்பாகும்….
பேஷ்வாக்கள்
இந்திய மன்னர்கள்; அவர்களை வீழ்த்தியது மகர் வீரர்களைக் கொண்ட அன்னிய
ஆங்கிலப்படை. இந்த வெற்றியை ஏன் இந்தியர்களான நாம் கொண்டாடவேண்டும் என்கிற
ரீதியில் இதை திசைதிருப்ப முயல்கிறது மதவாத/சாதியவாத கும்பல்….
ஜார்
மன்னர் ரஷிய மன்னர் தான், அவரை வீழ்த்தியதை ரஷியர்கள் ஏன் கொண்டாட
வேண்டும்; முசோலினி, ஹிட்லர், இடிஅமீன் இப்படி வரலாற்றில் பல
கொடுங்கோலர்கள் வீழ்த்தப்பட்டதை அந்நாட்டு மக்களே கொண்டாடவில்லையா?
கம்சன் கிருஷ்ணரின் மாமன் தான்; அவன் வீழ்ந்ததை துவாரகா மக்கள் கொண்டாடவில்லையா?
அண்ணன் வாலி வீழ்ந்ததை சுக்ரீவன் கொண்டாடவில்லையா?
கௌரவர் வீழ்ந்ததை பாண்டவர் கொண்டாடவில்லையா?
இதையெல்லாம்
அதர்மம் அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் என கொண்டாடுபவர்கள்,
கொடுங்கோலர்கள் பேஷ்வாக்களை சமதர்மத்தை நிலைநாட்ட தலித்துக்கள் வீழ்த்தியதை
ஏன் கொண்டாடக்கூடாது. குறைந்தபட்சம் கொண்டாடுபவர்களை அவர்கள் போக்கில்
விட்டுவிடவேண்டியது தானே நீதி!
அமெரிக்க
உள்நாட்டு யுத்தம் ஏன் நடந்தது என்பதை தர்மம், நீதி, பாவம், புண்ணியம்
பற்றி பேசும் இந்த மதவாதிகளும் சாதியவாதிகளும் அறிவார்களா?
கருப்பினத்தவரை
அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவே அல்லவா வட அமெரிக்க மற்றும் தென்
அமெரிக்க வெள்ளையர்கள் தங்களுக்குள் யுத்தம் நடத்தவேண்டியதாயிற்று.
கருப்பின மக்களை அடிமை நிலையிலிருந்து விடுவித்ததற்காக அல்லவா ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார்….
தலித்துக்களுக்காக
அப்படியொரு புரட்சியை ஏன் நாம் நடத்தவில்லை அல்லது நடத்தமுடியவில்லை என
புரட்சிப்பற்றி பேசுபவர்கள் சிந்திக்கவேண்டிய நாள் தான் கோரேகான்
வெற்றித்திருநாள்!
புத்தாண்டை வரவேற்போம். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விரும்பிய சாதி-பேதமற்ற, ஏற்றத்தாழ்வற்ற இந்தியாவை உருவாக்குவோம்….
*இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!*
*ஜெய்பீம்! ஜெய்பீம்! ஜெய்பீம்!*
–ஆ.கா.தனகுமார்
டாக்டர் அம்பேத்கர் இண்டல்லக்சுவல் சொசைட்டி,
ஐசிஎஃப், சென்னை.
Thank u