https://uni5.co/…/amudha-surabi-unconditional….
Amudha surabi - unconditional,
everlasting compassion and service மாரனை வெல்லும் வீர நின் அடி தீ
நெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி பிறர்க்கு அறம் அருளும் பெரியோய் நின்
அடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி எண் பிறக்கு ஒழிய இறந்தோய்
நின் அடி கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி தீ மொழிக்கு அடைத்த
செவியோய் நின் அடி வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி நரகர் துயர் கெட
நடப்போய் நின் அடி உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி வணங்கல் அல்லது
வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது போதி நீழல் பொருந்தித் தோன்றும் நாதன்
பாதம் நவை கெட ஏத்தி குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாண் அணி களையும் மாண் எழில்
சிதைக்கும் பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும்
பாவி அது தீர்த்தோர் இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது!!!
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!!! These are the lines from the great
Tamil epic Manimekalai. She praises the truth after getting the amudha
surabi. Manimekalai was the only daughter born to Kovalan and his
beloved love Madhavi in Poompuhar.