ஒருவன்
ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், “இவ்வுலகில் இப்போது புத்தர்
இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது.
அனைத்துமே வெற்றிடம் தான்.யாரும் எதுவும் கொடுப்பதில்லை.எதுவும்
பெறுவதில்லை.”என்றான்.
உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.
அவனுக்குக் கோபம் வந்து விட்டது.
“எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!”, என்று கேட்டார் துறவி.
டான்சன்,எகிடோ
இருவரும் புத்த பிட்சுகள்.ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று
கொண்டிருந்தனர்.மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.
ஒரு வளைவில் திரும்பும் போது,நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில்
அழகான இளம்பெண் வேலைப்பாடுடன் கூடிய அழகிய பட்டுச் சேலையைக் கட்டிக் கொண்டு அடுத்த பக்கம் போவதற்கு முடியாமல் நின்று கொண்டிருந்தாள்.
“இங்கே
வா!” என்று கூப்பிட்ட டான்சன் அவளைத் தன்னுடைய கையில் அலக்காக தூக்கிக்
கொண்டு சகதியான தெருவின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு போய்
சேர்த்தார்.
அன்று இரவு மடத்திற்கு திரும்பும் வரை எகிடோ எதுவும் பேசாமல் வந்தான்.
அதற்கு
மேல் பொருக்க முடியாமல், “நம்மைப் போன்ற புத்த பிட்சுகள் பெண்கள் அருகில்
செல்வது கூட தவறு.முக்கியமாக இளமையும்,அழகும் வாய்ந்த பெண்கள் பக்கத்தில்
செல்லவேக் கூடாது. நீ ஏன் அவளைத் தூக்கி கொண்டு சென்றாய்?” என்றான்.
“நான்
அந்தப் பெண்ணை அங்கேயே விட்டு விட்டேன்”என்ற டான்சன், “நீ ஏன் இன்னும்
சுமந்து கொண்டு இருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டார்.
ஒரு
டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான். ஒரு முறை
டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது. கோபம்
கொண்ட மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்.
அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம்
ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாட்டால் அது பெரும் அவமானம் என கருதப்படும். எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.
ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.அறிவுரை வேண்டி ஒரு ஜென் துறவியை நாடினான்.
அவனது கதை முழுதும் கேட்ட அவர், ” சண்டைக்கு இன்னும் எத்தனை
நாட்கள்
உள்ளன” என்று கேட்டார். ” 30 நாட்கள்” என்றான் அவன். ” இப்போது நீ என்ன
செய்கிறாய்?” என்று பின்பு கேட்டார். ” டீ ஆற்றுகிறேன்” என்றான் அவன்.
“அதையே தொடர்ந்து செய்” என்றார் அவர்.
ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன். “எனக்கு பயம்
அதிகரித்தவன்னம் இருக்கிறது. என்ன செய்ய?” என்றான். இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று” என்றார் ஜென் துறவி.
தன் பயத்தை எல்லாம் வேகமாக மாற்றி வெறித்தனமாய் டீ ஆற்றினான்.
இரண்டு வாரம் ஆனது. அப்போதும் அதே அறிவுரை.
போட்டி நாள் அருகில் வந்து விட்டது. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு” என்றார் துறவி.
மல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. “வா.. முதலில் டீ சாப்பிடு” என்றான் கடை காரன். “சரி” என்று அமர்ந்தான் வீரன்.
அவனது டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.
இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்!
ஒரு
சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு
எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணி போட்டியே வேண்டாம் என சென்று
விட்டான்.
புத்தரின் தலைமை மடாலயத்தில் நிகழ்ந்த சுவையான சம்பவம். அடிப்படை
சந்நியாஸப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சந்நியாஸிகள், தியானத்தை
மக்களுக்குக்
கற்றுத்தந்து, மக்கள் முன்னேற்றம் பெறுவதற்காக நாடு முழுவதும் சேவைக்காக
புறப்படும் நேரம் வந்தது. அதில் பூர்ணகாஷ்யபா எனும் சந்நியாஸிக்கு மட்டும்
எங்கு செல்வது என்று சொல்லப்படவில்லை.
பூர்ணகாஷ்யபா நேரடியாய் புத்தரிடமே சென்று கேட்டார், “”நான் எங்கு செல்லட்டும்?”
புத்தர் சிரித்தபடி சொன்னார், “”நீயே தேர்வு செய்யப்பா.” இந்தியாவின்
ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார்.
சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் புத்தர் கேட்டார், “”அந்தப்
பகுதிக்கா? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். சின்ன சின்ன
பிரச்னைக்கெல்லாம்
அடிதடி சண்டையில் இறங்குபவர்கள், கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ
இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்?”
“ஆமாம்” என்று தைரியத்தோடு சொன்ன சீடனிடம் புத்தர் சொன்னார்…
“உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம்.”
“ம்…”
“முதல் கேள்வி, அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்?”
“ரொம்ப ஆனந்தப்படுவேன். ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை; உதைக்கவில்லை.
திட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்களே; மிகவும் நல்லவர்கள்… என்று நன்றி சொல்வேன்.”
“இரண்டாவது கேள்வி. ஒருவேளை திட்டாமல் அடித்து உதைத்தால் என்ன செய்வாய்?”
“அவர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் என்னைக் கொல்லாமல்
விட்டுவிட்டார்கள். வெறுமனே அடித்ததோடு நிறுத்திக் கொண்டார்களே! என ஆனந்தப்படுவேன்.”
“மூன்றாவது கேள்வி. ஒருவேளை உன்னைக் கொன்றுவிட்டால் என்ன செய்வாய்?”
“ஆஹா
இன்னும் ஆனந்தப்படுவேன். மொத்தமாக இந்த வாழ்க்கையில் இருந்தே எனக்கு
சுதந்திரம் தந்துவிட்டார்கள். இனி எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய
அவசியமே இல்லை என்று மிகவும் ஆனந்தப்படுவேன்” என்று சொன்னதும்,
“நன்றாக தேறிவிட்டாய். அங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் நீ
வாழ்ந்து விடுவாய். எதனாலும் இனி உன்னை வீழ்த்தமுடியாது. எப்போதும்
ஆனந்தமாயிருக்க பக்குவப்பட்டுவிட்டாய். எங்கு சென்றாலும்
நல்லாயிருப்பாயப்பா. போய் வா” என்று ஆசிர்வதித்து அனுப்பினார் புத்தர்.
முதிய
ஜென் குரு ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். ‘‘இன்று மாலைக்குள்
இறந்துவிடுவேன்’’ என்று தன் சீடர்களிடம் தெரிவித்துவிட்டார். இதைக்
கேள்விப்பட்ட அவர் நண்பர்கள் பலரும், சிஷ்யர்களும் ஆசிரமத்தை வந்தடைந்தனர்.
மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்…
என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந் தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால்
எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த
உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதிக் கருத்து என்ன?’’ என்று கேட்டார்.
குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டு இறுதி மூச்சை விட்டார்.
அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்து போன நிமிடமும், வரப் போகும்
நிமிடமும் நமக்கானதல்ல. இன்று இப்போது மட்டுமே நிஜம்!
ஆஸ்ரமத்தின்
ஐந்து சீடர்கள் சைக்கிளில் சந்தைக்கு சென்றுவிட்டு திரும்புவதை தலைமை குரு
பார்த்துக்கொண்டிருந்தார். அவர்கள் ஆஸ்ரமத்தை அடைந்ததும் ஐவரையும்
அழைத்தார் .
ஐவரையும் நோக்கி ‘’ நீங்கள் ஏன் உங்கள் சைக்கிளை ஓட்டுகிறீர்கள் ? ‘’ என்று வினவினார்.
‘’ அது எனது வேலைகளை எளிமையாக்குகிறது ஐயா ‘’ முதலாமவன் பதிலளித்தான்.
அவனைத்தட்டிகொடுத்து ‘’நீ பெரிய அறிவாளி , நீ வயதானகாலத்தில் என்னைப்போல் கூன் விழாமல் நிமிர்ந்து நடப்பாய் ‘’ என்றார் குரு.
இரண்டாவது சீடனோ ‘’ நான் சைக்கிள் ஓட்டும்போது என்னால் இயற்கை அழகை எளிதாகவும் விரைவாகவும் ரசிக்க முடிகிறது ஐயா ‘’
அவனை அருகில் அழைத்து ‘’ உன் கண்கள் திறந்திருக்கின்றன நீ உலகை ரசிக்கிறாய் ‘’ என்றார்.
மூன்றாவது சீடன் ‘’ ஐயா நான் பயணிக்கையிலும் கூட மந்திரங்களை ஜெபிக்க முடிகிறது ‘’
குரு தன் கண்கள் விரிய ‘’ அடேயப்பா உன் புத்திக்கூர்மை வியக்கவைக்கிறது’’ என்று இரண்டு கைகளையும் சத்தமாக தட்டினார்.
நான்காவது சீடன் ‘’ நான் சைக்கிளில் பயணிப்பதால் ஏகாந்த நிலையை அடைகிறேன் ஐயா ‘’ என்றான்
குரு மனநிறைவோடு அவனை கட்டித்தழுவி ‘’ நீ ஞானத்தை அடையும் பாதையில் பயணிக்கிறாயடா ‘’ என்றார்.
ஐந்தாவது சீடன் நீண்ட அமைதிக்குப் பின் ‘’ என் சைக்கிளை ஒட்டுவதற்காக என் சைக்கிளை ஒட்டுகிறேன் ஐயா!
‘’ என்றான் .
குரு அவன் காலில் விழுந்து ‘’ ஐயா, என்னை மன்னியுங்கள்
, நீங்கள் என் சீடனாக இருக்க முடியாது , நான்தான் உங்கள் சீடன் ‘’
என்றார்.
ஒரு ஜென் துறவிக்கு நிறைய சீடர்கள் இருந்தனர்.
ஒரு
சீடன் திருடும் போது பிடிபட்டுக் கொண்டான். அவனை உடனே வெளியனுப்புமாறு
மற்ற சீடர்கள் கேட்டுக் கொண்டனர். துறவியோ கண்டுகொள்ளவே இல்லை.
மீண்டும் ஒரு முறை அவன் திருடும் போது பிடிபட்டான். அப்போதும் துறவி அதைக் கண்டுகொள்ளவில்லை.
உடனே மற்ற சீடர்கள் அனைவரும் ஒரு மனு எழுதி அச்சீடனை வெளியே
அனுப்பாவிட்டால் தாங்கள் அனைவரும் வெளியேறப்போவதாக எழுதி அனைவரும் கையொப்பமிட்டிருந்தனர்.
அதைப் படித்த துறவி அன்பு கனிந்த குரலில் கீழ்க்கண்டவாறு கூறினாராம்:
“சீடர்களே
நீங்கள் அனைவரும் எத்துணை புத்திசாலிகள் என்பதை நினைத்துப்
பெருமையடைகிறேன். உங்களால் எது சரி என்றும் எது தவறு என்றும் அறிய
முடிகிறதே! நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இந்த சீடருக்கு
என்னைத் தவிர வேறு யார் எது சரி என்றும் எது தவறு என்றும் எவ்வாறு
தவறுகளில் இருந்து சரியாகப் பயில வேண்டும் என்பதையும் சொல்லித்
தருவார்கள்?”
அப்போது அந்த சீடர் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வழிந்ததுடன் அதன் பிறகு அவர் திருடவேயில்லை.
ஒரு
மடத்தில் ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஜாலியான
குணமுடையவர். எப்போதுமே கோபப்படமாட்டார். அவரிடம் சீடர்கள் சிலர் கல்வி
கற்று வந்தனர்.
அவரது சீடர்களுக்கு அந்ததுறவி என்றால் மிகவும் பிடிக்கும்.
ஒரு நாள் அந்த துறவி தன் சீடர்களிம் பேசிக் கொண்டிருக்கையில்,சீடர்கள்.
அவரிடம்”குருவே! உங்களுக்கு பிடித்த கதை என்ன?” கேட்டனர். அதற்கு
அவர்”குதிரையும்
ஆடும்” என்று சொன்னார். அதென்ன குதிரையும் ஆடும், அது எந்த மாதிரியான கதை,
எங்களுக்கும் அந்தகதையை சொல்லுங்களேன் என்று வேண்டிக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குரு அந்த கதையைசொல்ல ஆரம்பித்தார்.
அதாவது
“ஒரு விவசாயி குதிரையையும், ஆட்டையும் வளர்த்து வந்தான். குதிரையும் ஆடும்
சிறந்த நண்பர்கள். ஒரு நாள் அந்த குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது.
அதனால் அந்த விவசாயி குதிரைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து
வந்தான். மருத்துவர் அந்த குதிரையின் நிலையைபார்த்து, நான் மூன்று நாட்கள்
வந்து மருந்து தருகிறேன். அந்த மருந்தை சாப்பிட்டு குதிரைஎழுந்து நடந்தால்
சரி, இல்லையெனில் அதனை கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லி, அன்றைய
மருந்தை கொடுத்துச் சென்றார்.
இவர்களது
உரையாடலைஅந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. மறுநாள், அந்த மருத்துவர் வந்து
அன்றைய மருந்தைக் கொடுத்து சென்றார். பின் அங்கிருந்த ஆடு, அந்த
குதிரையிடம் வந்து, “எழுந்து நடநண்பா, இல்லாவிட்டால் அவர்கள் உன்னை கொன்று
விடுவார்கள்” என்று அந்த குதிரையை ஊக்குவித்தது.
மூன்றாம் நாளும் வந்துவிட்டது, மருத்துவரும் வந்து குதிரைக்கு மருந்து
கொடுத்துவிட்டு,
அந்த விவசாயிடம்”நாளை குதிரை நடக்கவில்லையெனில், அதனை கொன்றுவிட வேண்டும்.
இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கு பரவிவிடும்.”
என்றுசொல்லிச் சென்றார்.
அந்த
மருத்துவர் போனதும், ஆடு குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து
நடக்க முயற்சி செய். உன்னால் முடியும், எழுந்திரு! எழுந்திரு! என்று
சொல்லியது. அந்த குதிரையும் முயற்சி செய்து எழுந்து நடந்துவிட்டது.
எதிர்பாராதவிதமாக அந்த குதிரையை விவசாயி பார்க்க வரும் போது,
குதிரைஓடியதைப்
பார்த்துசந்தோஷமடைந்து, மருத்துவரை அழைத்து அவரிடம்”என்ன ஒரு ஆச்சரியம்.
என் குதிரை குணமடைந்துவிட்டது. இதற்கு நிச்சயம்உங்களுக்கு ஒரு விருந்து
வைக்க வேண்டும். சரி, இந்த ஆட்டை வெட்டுவோமா!!!” என்று சொன்னார்” என்று
கதையை சொல்லி முடித்தார்.
பின் அவர்களிடம்”பார்த்தீர்களா! இந்த கதையில் உண்மையில் குதிரை
குணமடைந்ததற்கு
அந்த ஆடு தான் காரணம். ஆனால் மருத்துவரின் மருந்தால் தான் குதிரை
குணமடைந்தது என்றுஎண்ணி, கடைசியில் அந்த ஆட்டையே பலி கொடுக்க
நினைக்கிறார்கள். ஆகவே இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்ததோ, அவர்களை விட,
அந்த நன்மைக்கு அருகில் இருப்பவர்களுக்குத் தான் அதிக மரியாதை கிடைக்கும்.”
என்றுஇறுதியில் சொல்லி விடைபெற்றார்.
ஒரு
மடாலயத்தில் துறவியும் அவரது சிஷ்யர்களும் மாலை நேரம் தியானம் செய்து
கொண்டிருந்தனர். மடத்திலிருந்த ஒரு பூனை சத்தம் போட்டுக்கொண்டே அங்கும்
இங்கும் உலவிக் கொண்டிருந்ததால், தியானத்தில் இருந்த ஒருமைப்பாட்டைக்
கலைத்துக் கொண்டிருந்தது. அதனால் அந்த துறவி ”பூனையைக் கட்டிப்போடுங்கள்”
என்று உத்தரவிட்டார்.
சில
ஆண்டுகள் கழித்து அந்த துறவி இறந்து விட்டார். ஆனாலும் அந்த பூனையைக்
கட்டிப் போடும் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தனர். மேலும் சில வருடங்கள்
கடந்தன. அந்த பூனையும் இறந்து விட்டது. வேறொரு பூனை வரவழைக்கப் பட்டு கட்டி
வைக்கப் பட்டது. பல ஆண்டுகள்
கழித்து சீடர்கள் ,” நம் மத வழக்கப்படி பூனையை தியான நேரத்தில் கட்டி வைக்க வேண்டும்” என நூற்குறிப்புகள் எழுதி வைத்தனர்.
துறவி
ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன்
குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்”
என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்?” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய
விரும்புகிறேன்” என்றான்.
சட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன்
தலையை
ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக்
கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே
இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான்.
துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப்
பட்டது?” என்றார்.
”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.
கல்லூரிப்
பேராசிரியர் ஒருவர் புகழ் பெற்ற ஜென் துறவி ஒருவரை சந்திக்கச் சென்றார்.
பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பேசிக் கொண்டிருந்தார், தான் ஜென் பற்றி
மேலும் கற்க விரும்புவதாக்க் கூறினார்.
தேனீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு வந்த ஜென் துறவி, கோப்பையின் நுனி வரை தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பி வழிந்தது.
கோபத்துடன்
பேராசிரியர் “ கோப்பை நிரம்பி விட்டது. மேலும் ஊற்ற முடியாது.
நிறுத்துங்கள்” என்று கத்தினார். துறவி கூறினார்: “நீங்களும் இந்த கோப்பை
போலத்தான்.
உங்கள் கோப்பையைக் காலி செய்யாவிடின், நான் எவ்வாறு ஜென் பற்றி கற்றுக் கொடுப்பது?”
இரு
துறவிகள் ஆற்றில் தவம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு தேள் ஆற்றில்
தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தனர். உடனடியாக ஒரு துறவி அந்த தேளை
எடுத்து ஆற்றங்கரையில் விட்டார். அப்போது அத்தேள் அவரைக் கடித்துவிட்டது.
சிறிது நேரத்தில் திரும்பவும் அத்தேள் ஆற்றில் விழுந்து விட்டது. மீண்டும்
அத்துறவி அதனை எடுத்து கரையில் விடும் போது அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது.
இதனைக்
கண்ட இன்னொரு துறவி, ”நண்பரே , தேள் கொட்டும் எனத் தெரிந்தும் ஏன்
மீண்டும் மீண்டும் அதனைக் காப்பாற்ற எண்ணுகிறீர்கள்?” என்று கேட்டார்.
துறவி சொன்னார்: “கொட்டுவது தேளின் இயல்பு. காப்பாற்றுவது எனது இயல்பு”